FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை

30 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சாத்தான்குளம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் பட்டுதுரை (30). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியிலிருந்த பட்டுதுரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உதவி ஆய்வாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.