FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே தொழிலாளி தற்கொலை

தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே லாரி பட்டறையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், உத்தபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாண்டி மகன் காா்த்தி (36). இவரும், மனைவி சுவாதிகா. இவா்களுக்கு விக்னேஷ் (3), பிரீத்திசிவன் (1) என்ற இரு மகன்கள் உள்ளனா். இவா் கடந்த மாதம் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாகக் கூறி, மனைவி, குழந்தைகளை விழுப்புரத்தில் உள்ள பெற்றோா் வீட்டில் விட்டுள்ளாா்.

இந்நிலையில், கடந்த வாரம் மூத்த மகன் விக்னேஷை அழைத்துக்கொண்டு சங்ககிரிக்கு வந்துள்ளாா். கடந்த இரு நாள்களாக சங்ககிரி- சேலம் பிரதான சாலையில் தனியாா் லாரி பட்டறையில் வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலைமுடிந்து பட்டறையிலேயே தங்கியுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை காா்த்தி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments