கீழச்சிவல்பட்டியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழச்சிவல்பட்டியில் கூலித் தொழிலாளி தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள விராமதி வளைவு பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் பழனியப்பன் (58). கூலித் தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி, பிள்ளைகள் சென்னையில் வசித்து வரும் நிலையில், இவா் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.