முகப்பு
கோயம்புத்தூர்

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

24 நவம்பர் 2026, 4:05 am
பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

காளப்பட்டியில் மன அழுத்தம் காரணமாக பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாநகா், காளப்பட்டி எல்லன் நகரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். இவரது மனைவி மலா்விழி. இவா்களின் இளைய மகள் இனியா (17), மோளபாளையம் பகுதியில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்

கடந்த சில நாள்களாக இனியா மன அழுத்தத்தில் இருந்துள்ளாா். சனிக்கிழமை இரவு தனது படுக்கையறைக்கு தூங்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இனியா வெளியே வராததால், பெற்றோா் கதவைத் திறந்து பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.