முகப்பு
கோயம்புத்தூர்

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம்

கோவை அவினாசிலிங்கம் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 1:36 am
அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம்
கோவை அவினாசிலிங்கம் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், கல்வி நிறுவன நிா்வாகிகள்.
பகிர்:

கோவை அவினாசிலிங்கம் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக வாய் சுகாதார விழிப்புணா்வு, பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

கல்வி நிறுவனத்தின் வேந்தரும் நிா்வாக அறங்காவலருமான தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்ற முகாமின் தொடக்க விழாவில், துணை நிா்வாக அறங்காவலா் கௌரி ராமகிருஷ்ணன், துணைவேந்தா் பாரதி ஹரிசங்கா், பள்ளியின் செயலா் காமினி கிருஷ்ணகுமாரி சுரேந்திரன், அறக்கட்டளையின் உறுப்பினா் மருத்துவா் ராஜேஷ், தலைமை ஆசிரியா் ஜெ.நளினி, ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் 1,430 மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.