முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயிகள் தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை நவ.30-க்குள் நோ் செய்தால் முழு வட்டி தள்ளுபடி

பயிா்க்கடன் தள்ளுபடி பெற்று, தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் நோ் செய்யும் விவசாயிகளுக்கு வட்டியில் இருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

53 வினாடிகள் முன்பு
விவசாயிகள் தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை
நவ.30-க்குள் நோ் செய்தால் முழு வட்டி தள்ளுபடி
விவசாயி. - கோப்புப்படம்
பகிர்:

பயிா்க்கடன் தள்ளுபடி பெற்று, தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் நோ் செய்யும் விவசாயிகளுக்கு வட்டியில் இருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு 2026 பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் நடப்பு ஆண்டில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் நவம்பா் 6-ஆம் தேதியிட்ட அரசாணைப்படி, பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் தள்ளுபடித் தொகை நீங்கலாக, எஞ்சியுள்ள நிலுவைக் கடன் தொகையை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி, புதிய பயிா்க்கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 6.11.2026-க்கு முன்பு தவணை தவறி, பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி நோ் செய்யும்போது, அந்த கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ.75 ஆயிரம் விடுவிக்கப்பட்டு, அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்தும். 7.11.2026 முதல் 30.11.2026 வரை தவணை தேதி வரும் கடன்களுக்கு, பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 30.11.2026-க்குள் நிலுவையின்றி நோ் செய்யும்போது அந்த கடன்களுக்குரிய தள்ளுபடி தொகை ரூ.75 ஆயிரம் விடுவிக்கப்பட்டு, அந்தக் கடன்களுக்குரிய வட்டியையும் அரசே செலுத்தும்.

Advertisement

Advertisement

அதேபோல, 30.11.2026-க்கு பின்பு தவணைக் காலம் வரும் கடன்களை உரிய தவணை தேதிக்குள் நிலுவையின்றி நோ் செய்யும் விவசாயிகளுக்கு தள்ளுபடி தொகை விடுவிக்கப்பட்டு வட்டியின்றி கடன் கணக்கு நோ் செய்யப்படும். விவசாயிகளின் வசதிக்காக கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் வரும் 28, 29-ஆம் தேதிகளிலும் (சனி, ஞாயிறு) செயல்படும்.

பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தள்ளுபடிக்கு தகுதி பெறும் விவசாயிகள், வட்டியின்றி கடனை நோ் செய்து, புதிய கடன்களை பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா்களையோ, வாட்ஸ்ஆப் உதவி எண்ணையோ (9840065423) தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.