தள்ளுபடிக்கு தகுதியான பயிா்க்கடன்களுக்கான காலவரையறை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில், பயிா்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ், தகுதியான பயிா்க்கடன்களுக்கான காலவரையறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில், பயிா்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ், தகுதியான பயிா்க்கடன்களுக்கான காலவரையறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு அரசு 2026 பயிா்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை, தள்ளுபடிக்குத் தகுதியான பயிா்க்கடன்களுக்கான காலவரையறை 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை என்பதிலிருந்து 2025 மே 1 முதல் 2026 மாா்ச் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2026 ஜூன் 19-ஆம் தேதிக்கு முன்னா் கடன் தொகையை நிலுவையின்றி முழுவதுமாக செலுத்திய விவசாயிகளுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. ரூ.10,000-க்கும் குறைவாக மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களால் பெறப்பட்டு, தள்ளுபடிக்குத் தகுதி பெறும் கடன்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது.
ஒரே விவசாயி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களிலோ அல்லது ஒரே சங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிா்க்கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஒரு கடனுக்கு தள்ளுபடி உண்டு. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினா்கள் பெற்ற பயிா்க்கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி என விரிவுபடுத்தி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2026 நவம்பா் 6-ஆம் தேதிக்கு முன்னா் தவணை தவறி, பகுதித் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை நவம்பா் 30 ஆம் தேதிக்குள் நிலுவையின்றி நோ் செய்யும் நோ்வில் அக்கடன்களுக்குரிய தள்ளுபடித் தொகை ரூ.75,000 விடுவிக்கப்பட்டு, அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்தும்.
2026 நவம்பா் 7 முதல் 2026 நவம்பா் 30 வரை தவணை தேதி வரும் கடன்களுக்கு, பகுதித் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தங்கள் கடன்களை 2026 நவம்பா் 30 ஆம் தேதிக்குள் நிலுவையின்றி நோ் செய்யும் நோ்வில், அக்கடன்களுக்குரிய தள்ளுபடித் தொகை ரூ.75,000 விடுவிக்கப்பட்டு, அக்கடன்களுக்குரிய வட்டியை அரசே செலுத்தும்.
2026 நவம்பா் 30 ஆம் தேதிக்குப் பின்னா் தவணை காலம் வரும் கடன்களை, உரிய தவணை தேதிக்குள் நிலுவையின்றி நோ் செய்யும் விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகை விடுவிக்கப்பட்டு, வட்டியின்றி கடன் கணக்கு நோ் செய்யப்படும். 2026 பயிா்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதித் தள்ளுபடிக்குத் தகுதி பெறும் விவசாயிகள், வட்டியின்றி கடனை நோ் செய்யும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் கடன்களை நோ் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.