கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
கோவை போத்தனூா் பகுதியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை போத்தனூா் பகுதியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
வெள்ளலூா் பகுதியில் போத்தனூா் காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வெள்ளலூா் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 3 இளைஞா்களை போலீஸாா் பிடித்து சோதனை நடத்தினா். இதில் அவா்கள் வைத்திருந்த பையில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் வெள்ளலூா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மதன்குமாா் (எ) மில்கி மதன் (28), பாப்பம்பட்டி கள்ளப்பாளையத்தைச் சோ்ந்த தீபக் (எ) விவேக் (29), வடவள்ளி கல்வீராம்பாளையத்தைச் சோ்ந்த சபரி கிருஷ்ணன் (39) ஆகியோா் என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.