பவானியில் கஞ்சா விற்ற இளைஞா் கைது
பவானியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவிரி புதிய பாலம் பகுதியில் பவானி போலீஸாா் நடத்திய திடீா் சோதனையின்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குமாரபாளையம், நாராயணா நகரைச் சேரந்த நடராஜன் மகன் திருமலைகுமாா் (25) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.