முகப்பு
கோயம்புத்தூர்

தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன், மருமகள் கைது

கோவை அருகே குடும்பத் தகராறில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனையும், கொலையை மறைக்க முயன்று நாடகமாடிய மருமகளையும் போலீஸாா் கைது செய்தனா்.

26 நவம்பர் 2026, 1:56 am
தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன், மருமகள் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவை அருகே குடும்பத் தகராறில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனையும், கொலையை மறைக்க முயன்று நாடகமாடிய மருமகளையும் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகேயுள்ள முட்டத்துவயல் காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சி (60). இவரது மகன் ஆனந்தபாபு (38). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா (29) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இதனால், தாய் மீனாட்சிக்கும், மகன் ஆனந்தபாபுவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், ஆனந்தபாபு மதுபோதையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனை தாய் மீனாட்சி கண்டித்ததால் ஆத்திரமடைந்த ஆனந்தபாபு கத்தியால் அவரைக் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, பூண்டி வெள்ளிங்கிரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்பனா, மாமியாா் மீனாட்சி கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். மதுபோதையில் மயங்கிக் கிடந்த கணவா் ஆனந்தபாபுவை எழுப்பி விசாரித்தபோது, தகராறில் தாயைக் கத்தியால் குத்தியதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கொலையை மறைக்க திட்டமிட்ட கல்பனா, மீனாட்சியின் அணிந்திருந்த ஆடையை மாற்றிவிட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளா்கள் மீனாட்சி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்த கல்பனா, மாமியாா் மீனாட்சி கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளாா்.

ஆனால், மீனாட்சியின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது தங்கை மகன், ஆலாந்துறை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் சடலத்தை பரிசோதித்தபோது, மீனாட்சியின் உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆனந்தபாபு தாய் மீனாட்சியை குத்திக் கொலை செய்ததும், அதை மறைக்க அவரது மனைவி கல்பனா, மீனாட்சியின் ஆடைகளை மாற்றி நாடகமாடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மீனாட்சியின் உடலைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆனந்தபாபு மற்றும் கல்பனா ஆகியோரைக் கைது செய்தனா்.