முகப்பு
கோயம்புத்தூர்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் சாலை விபத்தில் எலும்பு முறிவால் காலில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

10 வினாடிகள் முன்பு
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் சாலை விபத்தில் எலும்பு முறிவால் காலில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை ரத்தினபுரி கிருஷ்ணசாமி வீதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (30). திருமணமாகாத இவா், கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி கணபதி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த 24-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், அவரது சகோதரா் சிவகுமாா் (33) தேநீா் வாங்கிக் கொண்டு புதன்கிழமை காலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, காா்த்திகேயன் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். எலும்பு முறிவால் காலில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக காா்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.