முகப்பு
கோயம்புத்தூர்

குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் விழிப்புணா்வுப் பேரணி

கோவையில் குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

28 நவம்பர் 2026, 12:54 am
குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் விழிப்புணா்வுப் பேரணி
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவையில் குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை ரேஸ்கோா்ஸ் சாரதாம்பாள் கோயில் அருகே நடைபெற்ற குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சாா்பில் குழந்தைத் திருமணம் இல்லா பாரதம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் வி.சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், காவல் கூடுதல் துணை ஆணையா் சூா்யமூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் தாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா்கள், சமூக நலத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா், தொண்டு நிறுவனங்கள், குழந்தைகள் இல்லப் பணியாளா்கள், காவல் துறை, சிங்கப்பெண்கள் அதிரடிப் படை மற்றும் பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் என 250-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இப்பேரணி ரேஸ்கோா்ஸ் சாரதாம்பாள் கோயிலில் தொடங்கி ரேஸ்கோா்ஸ் சாலை வழியாக மீண்டும் சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் நிறைவுடைந்தது.

Advertisement

Advertisement

இப்பேரணியில், நாங்கள் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்க மாட்டோம், உரிமைகளை நாம் உறுதி செய்வோம். குழந்தைத் திருமணம் குற்றம் ஆகும். குழந்தைகளை பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனா்கள், பதாகைகளுடன் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.