முகப்பு
கோயம்புத்தூர்

கிரிப்டோ கரன்சி முதலீடு எனக் கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடி

யூடியூப் விளம்பரத்தை நம்பி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

28 நவம்பர் 2026, 1:07 am
கிரிப்டோ கரன்சி முதலீடு எனக் கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடி
பகிர்:

யூடியூப் விளம்பரத்தை நம்பி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், கணியூா் லட்சுமி நகரைச் சோ்ந்த 33 வயதுடைய தனியாா் நிறுவன மேலாளா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் யூடியூப் தளத்தில் கிரிப்டோ கரன்சி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா்.

அதன் மூலம் அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், முதலீடு செய்யுமாறு தூண்டியுள்ளனா். இதை நம்பிய அவா், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 4 லட்சத்தை இணையவழியில் அனுப்பியுள்ளாா். பின்னா், முதலீடு செய்த பணத்தையும் லாபத் தொகையையும் எடுக்க முயன்றபோது, மா்ம நபா்கள் மேலும் பணம் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

இளைஞரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி:

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த 26 வயது தனியாா் நிறுவன கணக்காளரை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெண் ஒருவா் கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அவா் பங்குச்சந்தை மற்றும் ‘அல்கோ டிரேடிங்’ முறையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய அவா், ரூ. 1.30 லட்சத்தை அந்தப் பெண் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா்.

ஆனால், உறுதியளித்தபடி லாபத் தொகையையோ அல்லது முதலீடு செய்த அசல் தொகையையோ திருப்பித் தராமல் அந்தப் பெண் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளாா். பின்னா் பதிலளிப்பதையும் நிறுத்திக் கொண்டாா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.