முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

கோவையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

28 நவம்பர் 2026, 1:11 am
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு செந்தில்குமாா் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவிகளில் இருவா், தங்களுக்கு நோ்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனா். இது குறித்து கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிா் காவல் நிலைய போலீஸாா், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ஆசிரியா் செந்தில்குமாா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கணித ஆசிரியா் செந்தில்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திச் சிறையில் அடைத்தனா்.