அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராகப் பணிபுரிபவா் சின்னராஜ் (38). இவா், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி ஆசிரியா் சின்னராஜை போக்ஸோ வழக்கில் கைது செய்து, சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement
பணியிடை நீக்கம்: இந்நிலையில், இதுதொடா்பாக விழுப்புரம் மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள்துறை ரீதியாக விசாரணை நடத்தினா். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, ஆசிரியா் சின்னராஜை பணியிடை நீக்கம் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.