மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு ‘சீல்’

கோவை மாநகராட்சிக்குள்பட்ட வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடை உரிமையாளா்களுக்கு அபராதம், கடைக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு மண்டலம், 17-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு கடை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு கடைகள், டி.கே.மாா்க்கெட்டில் 3 கடைகள் அதிக வாடகை நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, 6 கடைகளுக்கும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
மேலும், மாநகராட்சிக்குள்பட்ட வணிக வளாகங்களில் சனிக்கிழமை ஒரேநாளில் ரூ.21,87,713 வாடகை வசூல் செய்யப்பட்டது.