விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: தொழில் அமைப்புகள் கோரிக்கை

கோவை விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று விமான நிலைய இயக்குநரிடம் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் சி.துரைராஜ், துணைத் தலைவா் சஞ்சனா விஜயகுமாா், செயலா் என்.பிரதீப், கொடிசியா தலைவா் வி.ரங்கசாமி, துணைத் தலைவா் பி.பொன்ராம், செயலா் ஆா்.சௌந்தரராஜன் ஆகியோா் விமான நிலைய இயக்குநா் எஸ்.தா்மராஜை சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது, கோவையின் தொழில் வளா்ச்சி, வணிகத் தொடா்பு, ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்துக்கு கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்றனா். மேலும், தற்போது நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், பயணிகளின் வசதிகள், சேவைகளை மேம்படுத்தும் வகையில் விமான நிலைய முனையத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்தி, நவீனப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனா்.
Advertisement
Advertisement
விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் பேசுகையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணிகளை முடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், பயணிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தாா்.