முகப்பு
திருச்சி

திருச்சியில் வான் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

28 நவம்பர் 2026, 2:50 am
திருச்சியில் வான் போக்குவரத்து 
பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம்
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு ஒத்திகை.
பகிர்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வான் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் அனைத்து விமான நிலையங்களிலும் நவம்பா் 23 முதல் 27 வரை வான் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய மீட்புக்குழு தயாா் நிலை மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை, வான் போக்குவரத்து மேலாண்மை, தகவல்தொடா்பு வழித்தட கருவிகள் சோதனை, விமான நிலைய இயக்கத் துறையில் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், விமான நிலையத்தில் அபாயகரமான பொருள்களைக் கண்டறிதல், விமான ஓடுதளம் மற்றும் டாக்ஸி வே உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சிகளில் விமான நிலைய இயக்குநா், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய தொழிலாகப் பாதுகாப்பு வீரா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.