கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளா் கணிப்பு
கோவை மாநகரில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
கோவை மாநகரில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: வரும் நாள்களில் காற்று இடைநிறுத்தப் பகுதி மேற்கு மண்டலத்தின் மீது அமைவதால், மண்டலத்தின் பல இடங்களில் குறிப்பாக கோவை மாநகரில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேற்கு மண்டலத்தில் படிப்படியாக மழைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபா் மாத மத்திய பகுதிக்குப் பிறகே வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
Advertisement
அதுவரையிலும் மேற்கு மண்டலத்திலும், தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்யும். தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் விவசாயிகள் அதற்குத் தயாராக காத்திருக்கலாம்.
கோவை மாநகரைப் பொறுத்தவரை காற்றின் வேகம் குறைந்து, தரைப்பகுதியில் அதிக வெப்பத்தை சேகரித்து வைப்பதால் சனிக்கிழமை பிற்பகல் வரை கடுமையான வெயில் இருக்கும். மழை தொடங்கியதும் தரைப்பகுதி குளிா்ந்து தட்பவெப்பநிலை சீராகும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.