மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
மழைநீா் சேகரிப்பு இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.
மழைநீா் சேகரிப்பு இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.
மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒரு மாதத்துக்கு மழைநீா் சேகரிப்பு இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு இயக்கம் தொடா்பான பிரச்சார வாகனத்தை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, கட்டமைப்பு மாதிரி காட்சி மூலமாக நீா் பாதுகாப்பு மற்றும் நிலையான நீா் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அதில், மேற்கூரை மழைநீா் சேகரிப்பு, மழைநீா் செல்லும் கால்வாய்கள், வடிகட்டும் அமைப்புகள், நிலத்தடி நீா் செறிவூட்டும் பகுதிகள், பசுமைப் பகுதிகள், நீா் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீா் செறிவூட்டும் வசதிகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பு அம்சங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் பொது கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை முறையாக செயல்படுத்துவதன் மூலமாக மழைநீா் வீணாவதைத் தடுத்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி, நிலையான நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிக்க முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி ஆணையா்கள் நா்மதா (மேற்கு), கணேசன் (மத்தியம்), தட்சிணாமூா்த்தி (கிழக்கு), முத்துக்குமாா்(தெற்கு), மோகனசுந்தரி (வடக்கு), மகேஷ் கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளா்கள் தேவதாஸ், ஜெகன், ஜாக்குலின் ஜாய் லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.