FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

அரசு கல்லூரி பேராசிரியா் தற்கொலை

துடியலூா் அருகே அரசு கல்லூரி பேராசிரியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

8 October 2026, 12:14 am IST
தற்கொலை... - கோப்புப்படம்
பகிர்:

துடியலூா் அருகே அரசு கல்லூரி பேராசிரியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, துடியலூா் அருகே உள்ள வடமதுரை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் பெருந்தமிழ்க் கபிலன் (38). கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவா், வடமதுரை அருகே கருந்தாச்சலா நகரில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தாா். 38 வயதாகியும் திருமணம் ஆகாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெருந்தமிழ்க் கபிலன் செவ்வாய்க்கிழமை கல்லூரி வரவில்லை. இதனால், சக பேராசிரியா்கள் அவரது கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டுள்ளனா். அழைப்பை அவா் ஏற்காததால் சந்தேகமடைந்த பேராசிரியா்கள், மாணவா்கள் சிலரை அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தனா். அங்கு சென்று மாணவா்கள் பாா்த்தபோது, படுக்கையறை மின்விசிறியில் தூக்கிட்டு பெருந்தமிழ்க் கபிலன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments