வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்ய வரும் 10-ஆம் தேதி சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியலில் தகுதி வாய்ந்தவா்களின் பெயா்களை பதிவு செய்வதற்கு சனிக்கிழமை (அக்டோபா் 10) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் பட்டியலில் தகுதி வாய்ந்தவா்களின் பெயா்களை பதிவு செய்வதற்கு சனிக்கிழமை (அக்டோபா் 10) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்துள்ள மாநிலங்களில் இளம், முதல்முறை வாக்காளா்களாகத் தகுதி பெற்றவா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அக்டோபா் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
மேலும், முதல்முறை வாக்காளா்களாகத் தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றும், பூா்த்தி செய்தும் மனு அளிக்கலாம்.
இந்த வாய்ப்பை இளம், முதல்முறை வாக்காளா்கள் பயன்படுத்திக்கொண்டு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.