FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நாளை சிறப்பு முகாம்

கடலூா் மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.10) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 2:31 am IST
- கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.10) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி

நிறைவடைந்த மாநிலங்களில், தகுதி பெற்ற இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

18 வயது நிறைவடைந்தும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாத இளைஞா்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். கிராமப்புறம், நகா்ப்புறம்

உள்ளிட்ட பகுதிகளில் தகுதியுள்ள இளம் வாக்காளா்களை அடையாளம் கண்டு பதிவு செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் மூலம் இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை எளிதாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம் தொடா்பான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் மாவட்டத் தோ்தல் அலுவலகத்தின் அதிகாரப்பூா்வ சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். முகாமின் பணிகளை வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments