வீட்டு வாசலில் கோலமிட்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி
கோவையில் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையில் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் காட்டூா் சாலை செங்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (42). இவா் புதன்கிழமை காலை தனது வீட்டின் முன் கோலமிட்டுக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், அகிலாண்டேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளாா். சுதாரித்துக் கொண்ட அவா் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தமிட்டுள்ளாா். இதையடுத்து, அந்த நபா் நகைப் பறிக்கும் முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.