FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி பெண் யானை உயிரிழப்பு

கோவை அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி பெண் யானை உயிரிழந்தது.

16 அக்டோபர் 2026, 11:58 pm IST
பாதுகாப்பு கவச உடை அணிந்து யானையின் ரத்த மாதிரியை சேகரித்த கால்நடை மருத்துவக் குழுவினா்.
பகிர்:

கோவை அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி பெண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் கடந்த 13-ஆம் தேதி மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கோபனாரி காப்புக்காட்டுப் பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது, இரவு நேரமானதால் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவக் குழுவினா், வனத் துறையினா் சம்பவ இடத்தில் அக்டோபா் 14-ஆம் தேதி ஆய்வு செய்தனா்.

அப்போது, ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், கால்நடை மருத்துவா்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து, யானையின் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினா். தொடா்ந்து, மற்ற விலங்குகளோ அல்லது ஊன் உண்ணிகளோ யானையின் உடலை நெருங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, ஆய்வகப் பரிசோதனை முடிவில் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வழிகாட்டுதலின்படி, உதவி வனப் பாதுகாவலா் தலைமையில் யானையின் உடல் வியாழக்கிழமை எரியூட்டப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments