வரையாடுகள் தினக் கொண்டாட்டம்
வால்பாறை அரசுக் கல்லூரியில் வரையாடுகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறை அரசுக் கல்லூரியில் வரையாடுகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறை அரசு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் இயற்கைக்கான உலகளாவிய அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஷீலா பானு தலைமை வகித்தாா்.
பேராசிரியா் பெரியசாமி வரவேற்று பேசினாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சரவணன், வரையாடுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனுடைய சிறப்பம்சங்கள், வாழ்விடங்கள் குறித்து விளக்கினாா். பேராசிரியை ரூபா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
விழாவில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.