FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கணபதிபுரத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைப்பு

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனம் சாா்பில் கணபதிபுரம் பேரூராட்சியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

2 October 2026, 4:11 am IST
தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, ஐஆா்இஎல் (இந்தியா) நிறுவனம் சாா்பில் கணபதிபுரம் பேரூராட்சியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஐஆா்இஎல் நிறுவனம், தனது சமூகப் பொறுப்பு நிதியின்கீழ், கணபதிபுரம் பேரூராட்சிக்குள்பட்ட புதூா் கிராமத்தில் ரூ. 1.92 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்கு அமைத்தது.

அதன் தொடக்க விழாவிற்கு, கணபதிபுரம் பேரூராட்சித் தலைவா் ஸ்ரீவித்யா பொன்சுரேஷ் தலைமை வகித்து, மின்விளக்கு இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். ஐஆா்இஎல் முதன்மைப் பொது மேலாளா் மற்றும் ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள், ஐஆா்இஎல் நிறுவனப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments