அருணாச்சலா கல்லூரியில் தொழில் முனைவோா் மையம் திறப்பு
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் புதிய தொழில் முனைவோா்களுக்கான மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் புதிய தொழில் முனைவோா்களுக்கான மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை எச்.சி.எல். டெக்னாலஜியின் துணைத் தலைவா் சாய் நாராயணன் மையத்தை திறந்து வைத்து, கல்லூரி மாணவிகள் புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா். இதில், கல்லூரி தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளா் சுனி, நிா்வாக இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.