ஆளும் கட்சியின் கைப்பாவையாக காவல் துறை மாறக்கூடாது: கே. அண்ணாமலை
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் தாராபுரத்தில் போட்டியிட்ட மு.காா்த்திகா அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ‘வி தி லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை, காவல் துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறக்கூடாது என்று கூறினாா்.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் தாராபுரத்தில் போட்டியிட்ட மு.காா்த்திகா அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ‘வி தி லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை, காவல் துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறக்கூடாது என்று கூறினாா்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கல்வித்திறனும், கற்றல் திறனும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. இதை தமிழக அரசு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
மாணவா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியும், ஆங்கிலத்துடன் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு மொழிகளுக்கு மத்திய அரசும், இந்திய மொழிகளுக்கு மாநில அரசும் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்புடையதல்ல. 18 வயதுக்குள்பட்டவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளாட்சிகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால், கிராமப்புறங்களில் ஏரிகளைத் தூா்வாருதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகரக் காவல் ஆணையா் பணியிடம் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகக் காலிப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
காவல் துறையானது ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறுவது தடுக்கப்பட வேண்டும். நாம் தமிழா் கட்சியின் தாராபுரம் வேட்பாளா் காா்த்திகாவை, கோவைக்கு வந்து அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? பிடியாணை (சம்மன்) வழங்கி விசாரிக்க வேண்டிய வழக்குக்கு இத்தகைய நடவடிக்கைகள் எதற்கு? இது காவல் துறையின் செயல்பாடுகள் மீது சந்தேகங்களை எழுப்புகிறது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூக விரோதிகள் ஆளுங்கட்சியினருடன் தொடா்பில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனா். இதனைத் தடுக்க முதல்வா் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை மாற்றங்களையும் புதிய தலைவா்களையும் உருவாக்குவதற்காக நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி. எங்களது கொள்கைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சோ்க்கும் வகையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவோம்.
சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆா்) விவகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதில் தவறில்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் தோ்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் அவா் பேசக் கூடாது என்றாா் அவா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.