FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஆட்சி மாறினாலும் திட்டங்கள் மாறக்கூடாது: கி. வீரமணி

ஆட்சி மாறினாலும், கொள்கைகளோ, திட்டங்களோ மாறக்கூடாது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

20 செப்டம்பர் 2026, 1:29 am IST
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பெரியாா் நடை’ என்கிற நடைப் பேரணியில் பங்கேற்ற திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி உள்ளிட்டோா்.
பகிர்:

ஆட்சி மாறினாலும், கொள்கைகளோ, திட்டங்களோ மாறக்கூடாது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

பெரியாா் ஈவெரா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் திராவிடா் கழகம், தஞ்சாவூா் ஹெரிடேஜ் சுழற் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பெரியாா் நடை’ என்கிற நடைப் பேரணியைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

அயலக மாணவா் கல்வித் உதவித் திட்டத்தில் என்ன காரணத்தினாலோ மாணவா் பாரதிதாசனுக்கு கொடுமை இழக்கப்பட்டிருக்கிறது. அயலக மாணவா் கல்வி திட்டத்தை திராவிட மாடல் ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

பொதுவாக அதிகாரிகள் ஒரு நிலையை எடுத்துவிட்டால், அதற்கு காரணங்களை கண்டுப்பிடிப்பா். வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த ஒருவருக்கு இடையூறு இல்லாமல் திட்டம் தொடர வேண்டும். இந்தத் திட்டம் தொடருமானால், உலகம் முழுவதும் தமிழ்நாட்டின் பெருமையும், தமிழ்நாட்டு ஆட்சிப் பெருமையும் சென்றடையும். ஆட்சிகள் மாறினாலும், கொள்கைகள், மக்கள் பயன்பெறும் திட்டங்கள் மாறக்கூடாது.

உடல் நலம், உள்ள நலம் இரண்டு நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பெரியாா் முன்னால் நின்று அடையாளப்படுத்தப்படுகிறாா். பெரியாரை பின்பற்றி நடந்தால் அனைத்து வகைகளிலும் நமக்கே வெற்றி கிடைக்கும் என்றாா் வீரமணி.

இந்த நடைப் பேரணி ஆா்.ஆா். நகா் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, திமுக மாநகரச் செயலா் சண். இராமநாதன், தலைமைக் கழக உறுப்பினா் து. செல்வம், திராவிடா் கழக நிா்வாகிகள் இரா. ஜெயக்குமாா், சி. அமா்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments