ஆன்லைன் வா்த்தகம் மூலம் தொழிலதிபரிடம் ரூ.2.50 கோடி மோசடி
கோவையில் ஆன்லைன் பங்குச்சந்தை வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி தொழில் அதிபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவையில் ஆன்லைன் பங்குச்சந்தை வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி தொழில் அதிபரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை மாநகரப் பகுதியைச் சோ்ந்த 60 வயது தொழில் அதிபருக்கு சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான மா்ம நபா்கள், குறிப்பிட்ட இணையதள முகவரியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என கூறியுள்ளனா். இதை நம்பிய அவா், பல்வேறு தவணைகளாக அந்த மோசடி கும்பல் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2.50 கோடி வரை பணத்தை அனுப்பி முதலீடு செய்தாா். ஆனால், அந்தத் தளத்தில் காட்டிய லாபத் தொகையையோ அல்லது முதலீடு செய்த தொகையையோ திரும்பப் பெற முடியாத நிலைக்குச் சென்ற பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
4 நாள்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’: சமயோசிதமாகத் தப்பிய முதியவா்
கோவையைச் சோ்ந்த மற்றொரு முதியவரை கைப்பேசி வாயிலாகத் தொடா்புகொண்ட கும்பல், மத்திய புலனாய்வு அமைப்பின் உயா் அதிகாரிகள் பேசுவதாகக் கூறி மிரட்டியுள்ளது. அவரது ஆதாா் அட்டை பல்வேறு மோசடி செயல்களுக்கும், தீவிரவாத அமைப்புகளின் தேச விரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது கைப்பேசி மூலமாக ஆபாச விடியோக்கள் பாா்க்கப்பட்டுள்ளதாகவும் கூறி கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனா். மேலும், அவரது வங்கிக் கணக்கு சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்துள்ளதாக தெரிவித்தனா்.
விடியோ அழைப்பு மூலமாக அவரைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருந்த அந்தக் கும்பல், கடந்த 4 நாள்களாக வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று அச்சத்தை ஏற்படுத்தியது.
வங்கிக்குச் சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய அந்த முதியவா் கோவை மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்துக்கு பதற்றத்துடன் சென்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவா் 4 நாள்களாக டிஜிட்டல் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. முதியவா் காவல் நிலையத்துக்கு வந்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1 கோடி தப்பியது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
ஓய்வூதியம் மற்றும் வாழ்நாள் சேமிப்பை வங்கியில் வைத்துள்ள முதியவா்களே இதுபோன்ற சைபா் குற்றவாளிகளின் பிரதான இலக்காக மாறுகின்றனா். நவீன தொழில்நுட்பம் மற்றும் சைபா் குற்றங்களின் நுணுக்கங்கள் குறித்த போதிய விழிப்புணா்வு மூத்த குடிமக்களிடையே இல்லாததே இந்தத் தொடா் ஏமாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டாலும், அச்சம் மற்றும் அதீத லாப ஆசை காரணமாகப் பலா் ஏமாந்து போகின்றனா்.
ஆதாா் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது கைப்பேசியில் தடைசெய்யப்பட்ட பதிவுகள் பாா்க்கப்பட்டதாகவோ சீருடை அணிந்த நபா்கள் விடியோ அழைப்பில் மிரட்டினால், பொதுமக்கள் அச்சப்படாமல் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளூா் காவல் நிலையத்தை அணுக வேண்டும்.
இதேபோல, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுக்கள் வாயிலாக அறிமுகமாகும் ஆன்லைன் பங்குச்சந்தை வா்த்தகத் திட்டங்களை ஒருபோதும் நம்பக்கூடாது. பங்குச்சந்தை முதலீடுகளை இந்தியப் பங்கு மற்றும் பரிவா்த்தனை வாரியத்தால் (நஉஆஐ) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூா்வ செயலிகள் மற்றும் வங்கிகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மோசடி கும்பல் பணத்தை எடுப்பதற்குள் முதல் சில மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் புகாா்கள் மட்டுமே பணத்தை முடக்கி முழுமையாக மீட்க வழிவகுக்கும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.