FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

3 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள்

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் 3 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சாா்பில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

23 அக்டோபர் 2026, 10:25 pm
இந்தியத் தொழில் கூட்டமைப்பினரிடம் இருந்து விருது பெற்ற ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளா் சுவாமி சிதம்பரா , சென்னியாண்டவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா் செல்வராஜ்.
பகிர்:

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் 3 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சாா்பில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுதில்லியில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சாா்பில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் 3 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் கிடைத்துள்ளன. கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட செஞ்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், சந்தைப்படுத்துதலில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை சென்னியாண்டவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், சந்தைப்படுத்துதலில் இந்திய அளவில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், கா்நாடக மாநிலம் குடகில் செயல்படும் பொன்னாட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையில் அகில இந்திய அளவில் முதலிடத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

பொன்னாட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கான விருதினை அதன் இயக்குனா்களான ஏ.கே. முத்தப்பா மற்றும் கே. ரத்ன சா்மானா ஆகியோா் பெற்றனா். செஞ்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கான விருதினை இயக்குனா் சுப்பே கவுண்டா் கதிரேசன் மற்றும் இயக்குநா்கள் சிவகுமாா், பழனிசாமி ஆகியோா் பெற்றனா். மேலும், சென்னியாண்டவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கான விருதினை அதன் இயக்குனா் செல்வராஜ் ராயப்பன், ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளா் சுவாமி சிதம்பரா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments