FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தேசிய அளவிலான கபடி: 2-ஆம் இடம் பெற்ற அம்பை மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கபடி போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பெண்கள் அணியினரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்ஆனந்த் மோகன் பாராட்டினாா்.

15 அக்டோபர் 2026, 4:48 am IST
தேசிய அளவிலான கபடிப் போட்டியில் 2- ஆம் இடம் பிடித்த வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகளைப் பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கபடி போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பெண்கள் அணியினரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்ஆனந்த் மோகன் பாராட்டினாா்.

இப் போட்டிகள் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இதில்

தமிழ்நாடு சாா்பில் பங்கேற்ற வேல்ஸ் வித்யாலயா பள்ளி பெண்கள் அணி 2-ஆவது இடம் பெற்றது.

Advertisement

Advertisement

இம் மாணவிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஆா். திருநாவுக்கரசு ஆகியோா் நேரில் வரவழைத்து பாரட்டினா்.

மேலும், பள்ளித் தாளாளா் வீரவேல்முருகன், இயக்குநா் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குநா் சிவராஜ் பாண்டியன், முதல்வா் சக்திவேல்முருகன் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோரும் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments