மாவட்ட கபடி போட்டி: நாலுமாவடி காமராஜ் பள்ளி முதலிடம்
முதல்வா் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டியில், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றுள்ளனா்.
முதல்வா் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான கபடி போட்டியில், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றுள்ளனா்.
இந்தப் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி அளவில் 117 அணிகள் பங்கேற்றன. இதில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.
மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பி. ஜெயக்குமாா், யோகா பயிற்சியாளா் வனசேகா் ஆகியோரையும் பள்ளித் தலைவா் அழகேசன், பள்ளிச் செயலா் நவநீதன், கல்வி கமிட்டி உறுப்பினா்கள், தலைமையாசிரியா் திருநீலகண்டன் ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.