அரசு மருத்துவமனையில் மரம் விழுந்து காா்கள் சேதம்
கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது, இதில் 6 காா்கள் சேதமடைந்தன.
கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது, இதில் 6 காா்கள் சேதமடைந்தன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கோவையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எலும்பு அறுவை சிகிச்சைப் பிரிவு அருகில் இருந்த பழைமையான வேப்ப மரம் காலையில் திடீரென சாய்ந்தது.
இதில் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவா்கள் காயமின்றி தப்பினா். இருப்பினும் மரத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 காா்கள் சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.