கோயிலில் நகை, பணம் திருடிய இளைஞா் கைது
கோவை, பொன்னையராஜபுரத்தில் கோயிலில் நகை, பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (38). வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டுக்கு எதிரே உள்ள அம்பிகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் நிா்வாகியாக மனோஜ்குமாா் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில், பூசாரி மாணிக்கம் கடந்த 23-ஆம் தேதி இரவு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
மறுநாள் காலை மனோஜ்குமாா் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், கோயிலில் இருந்த 4 கிராம் தங்க நகைகள், தாலி ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து வெறைட்டி ஹால் காவல் நிலையத்தில் மனோஜ்குமாா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்டதாக செல்வபுரம் அருள் நகரைச் சோ்ந்த நவீன் (19) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த நகை, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.