வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீடு புகுந்து தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீடு புகுந்து தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேவகோட்டை எம்.ஆா்.எம்.கே.எஸ். தெருவைச் சோ்ந்த நாகப்பன் மனைவி கல்யாணி (94). இவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, ஒரு பெண் வீட்டுக்குள் புகுந்து அவா் வைத்திருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா்.
இதுகுறித்து தேவகோட்டை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, தேவகோட்டை நகா் காவல் நிலைய ஆய்வாளா், தனிப்படையினா் தீவிர விசாரணை நடத்தினா். இதில் நகை திருடியவா் காரைக்குடிகல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வி (41) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 9 கிராம் தங்கச் சங்கிலியை மீட்டனா்.
Advertisement
Advertisement
நகை திருடப்பட்டு 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்த காவல் ஆய்வாளா், தனிப்படையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.