FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

கோவையில் பூஜை அறையில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

29 அக்டோபர் 2026, 3:22 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் பூஜை அறையில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை, சாய்பாபா காலனி கே.கே.புதூா் 7-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ராகோத்தம்மன். இவரது மனைவி லட்சுமி (89). இவா் தனது வீட்டின் பூஜை அறையில் கடந்த 26-ஆம் தேதி இரவு விளக்கேற்றிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments