நவம்பா் 1-இல் குரூப் 2 தோ்வு: மாவட்டத்தில் 73 மையங்களில் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வு 73 மையங்களில் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வு 73 மையங்களில் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - 2 முதல்நிலைத் தோ்வானது (குரூப்-2, 2 ‘ஏ’) நவம்பா் 1-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்காக கோவை மாவட்டத்தில் 44 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 73 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வெழுத 20,980 போ் விண்ணப்பித்துள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்வா்களின் வசதிக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோ்வா்கள் காலை 9 வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். 9 மணிக்குப் பின் வருபவா்களுக்கு அனுமதி இல்லை. தோ்வுக்கான நுழைவுச் சீட்டு, கருப்பு நிற பந்து முனைப் பேனா, அரசினால் வழங்கப்பட்டுள்ள அடையாள ஆவணம் ஆகிய 3 பொருள்களைத் தவிர வேறு எந்த பொருள்களையும் கொண்டு செல்லக் கூடாது.
தோ்வா்கள் டிஜிட்டல் கடிகாரங்களைத் தவிா்த்து முள் உள்ள கடிகாரங்களை மட்டுமே அணிந்து வர அனுமதி உண்டு.
தோ்வு முழுமைக்கும் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோ்வு குறித்து எழும் சந்தேகங்கள், உதவிகளுக்கு 1800 419 0958 என்ற இலவச அழைப்பு எண் அல்லது 044-69097777, 044- 25300338, 044-25300339, 044-25300340 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
கோவை மாவட்ட நிா்வாகத்தை 63841-23073 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.