FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கல்வி உதவித்தொகை பெற நவ.11 வரை முஸ்லிம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நவம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 அக்டோபர் 2026, 11:24 pm
பகிர்:

முஸ்லிம் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நவம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு 2026-2027-ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கான உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2026-2027-ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்டோபா் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தற்போது, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாம் நவம்பா் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் (மய்ஸ்ரீா்ய்க்ண்ற்ண்ா்ய்ஹப் ா்ச்ச்ங்ழ் ப்ங்ற்ற்ங்ழ்) பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் மற்றும் நிதி, மனிதநேயம் மற்றும் கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள் (ஏன்ம்ஹய்ண்ற்ண்ங்ள்), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.

மேலும், வெளிநாடு சென்ற பின் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் ஏற்கெனவே கல்லூரியில் சோ்ந்தவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் ம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments