வெளிநாட்டில் முதுகலை படிப்பு: சிறுபான்மையின முஸ்லிம் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவா், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவா், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 38 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவா், மாணவிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்/மாணவிகள் 2026-2027 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய (குவாக்கரெல்லி சைமண்டல்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், நிதி, மனிதநேயம், கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்தெ டுத்து முதுகலை பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக். 15ஆகும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.