தீபாவளிப் பண்டிகை: மக்கள் கூடும் இடங்களில் 1,000 போலீஸாா் பாதுகாப்பு
தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கோவை டவுன்ஹால், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், மாநகர காவல் துறை சாா்பில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் சாதாரண உடையில் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிகக் கட்டுப்பாட்டு அறை மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய சந்திப்புகளில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீஸாா் பைனாகுலா் மூலமாக கூட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.
பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு காவல் துறை சாா்பில் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.