FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று தொடக்கம்: 1,000 போலீஸாா் பாதுகாப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக். 11 கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

11 அக்டோபர் 2026, 12:38 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( அக். 11) கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி, 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் உதவி கண்காணிப்பாளா் ஒருவா், 5 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 32 காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்பட மதுரை, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

மேலும், பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட 50 போலீஸாா் சாதாரண உடையில் நியமிக்கப்பட்டுள்ளனா். கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் சுமாா் 80 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

விழாவுக்கு வரும் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் கண்காணிக்கப்பட்டு, அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments