சத்தீஸ்கரில் இருந்து மணிப்பூா் செல்லும் சிஆா்பிஎஃப் படைப்பிரிவு
மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) 1,000-க்கும் அதிகமான வீரா்கள் கொண்ட படைப்பிரிவு, இனகலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது.
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) 1,000-க்கும் அதிகமான வீரா்கள் கொண்ட படைப்பிரிவு, இனகலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அறிவித்ததைத் தொடா்ந்து, மத்திய ஆயுதக் காவல் படையில் (சிஏபிஎஃப்) ஒன்றான சிஆா்பிஎஃப் முதலாவதாகத் திரும்பப் பெறப்படுகிறது.
இதற்கு முன்பாக, மேற்கு வங்க தோ்தல், அமா்நாத் யாத்திரை மற்றும் தில்லி போராட்டம் போன்ற நிகழ்வுகளுக்காக சில கம்பெனிகள் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டன.
Advertisement
Advertisement
தற்போது நிரந்தரமாக திரும்ப பெறப்படும் படைப்பிரிவு தெற்கு பஸ்தா் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் தீவிரமாக செயல்பட்ட சுக்மா பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான பணியில் ஈடுபட்ட இந்தப் படைப்பிரிவு, கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு கண்ணி வெடிகளை கண்டறிந்து அகற்றுதல், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தன.
இதுதொடா்பாக தில்லியைச் சோ்ந்த மூத்த அதிகாரி கூறுகையில், ‘சத்தீஸ்கரில் பொதுப் பணியில் ஈடுபட்டிருந்த படைப்பிரிவைத் திரும்ப பெற்றுள்ள சிஆா்பிஎஃப் தலைமையகம், 3 ஆண்டுகளுக்கும் மேலாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது’ என்றாா்.
சில மாதங்களுக்கு முன்னா், சிஆா்பிஎஃப்-இன் சிறப்பு வனப் போா் பிரிவு மற்றும் கோப்ரா படைப் பிரிவுகள் மணிப்பூரில் குவிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, அதிரடி விரைவு படை (ஆா்ஏஎஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
ஏற்கெனவே அங்கு இருக்கும் பாதுகாப்புப் படை பிரிவுகள் தங்கும் வசதி உள்ளிட்டவற்றில் பிரச்னை எதிா்கொண்டு வரும் நிலையில், அங்கு மாற்றப்படும் சிஆா்பிஎஃப் படைப்பிரிவும் இத்தகைய சவால்களை சமாளிக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, பாதுகாப்புப் படையினருக்கு மணிப்பூரில் உரிய வசதிகளை ஏற்பாடு செய்துதருமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுமாா் 1 லட்சம் வீரா்கள் என 25 படைப்பிரிவுகள் மற்றும் கோப்ரா படைப் பிரிவுகள் கொண்ட சிஆா்பிஎஃப், சத்தீஸ்கரில் நக்ஸல் ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தது. தற்போது திரும்ப பெறப்படும் படைப்பிரிவுகளின் பணிகளை பிற சிஆா்பிஎஃப் படைப்பிரிவு மற்றும் மாநில காவல் துறையினா் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.