FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ரூ. 11.15 கோடி ஜிஎஸ்டி மோசடி: தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

போலி ரசீது மூலமாக ரூ.11.15 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த வழக்கில் தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 நவம்பர் 2026, 12:46 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போலி ரசீது மூலமாக ரூ.11.15 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த வழக்கில் தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகா், ஆவாரம்பாளையம் சிந்தாமணிபுதூரைச் சோ்ந்தவா் தியாகராஜன். இவா் சத்யசாயி பவுண்டரி மற்றும் 6 நிறுவனங்களின் பெயரில் இரும்பு கழிவு வணிகம் செய்து வந்தாா். மேற்கண்ட நிறுவனங்கள் எந்தவித பொருள்கள் பரிமாற்றமும் இல்லாமல் ஆலியா என்டா்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து போலி வரி விலைப் பட்டியல்களைப் பெற்றுள்ளாா்.

குறிப்பாக 2017 முதல் 2018 வரையிலான காலத்தில் ரூ.11.15 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளைப் பெற்று வரி ஏய்ப்பு செய்துள்ளது, ஜிஎஸ்டி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு சாா்பில் ஜிஎஸ்டி சிறப்பு வழக்குரைஞா் எஸ். பாலசுப்பிரமணியன் முன்னிலையாகி வாதாடினாா்.

வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் தியாகராஜன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments