FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கொசுப்புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்கள்: கிணறுகள், நீா்நிலைகளில் விடும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சிக்குள்பட்ட கிணறுகள், நீா்நிலைகளில் கொசுப்புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்களை விடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2 செப்டம்பர் 2026, 4:53 am IST
மேற்கு மண்டலத்தில் உள்ள நீா்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அலுவலா்கள்.
பகிர்:

கோவை மாநகராட்சிக்குள்பட்ட கிணறுகள், நீா்நிலைகளில் கொசுப்புழுக்களை விழுங்கும் கம்பூசியா மீன்களை விடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளிலும், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவின் பேரில் மாநகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில் 1,200 கொசு ஒழிப்பு பணியாளா்கள் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 20 வாா்டுகளில் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஆய்வு பணிகளின் அடிப்படையில், கொசுப்புழு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து 20-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கக் கூடிய இத்தகைய மீன்கள் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் கல்வீரம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உற்பத்தி செயயப்படுகிறது. ஆண் மீன் சிறியதாகவும்,

பெண் மீன் பெரியதாகவும் இருக்கும். ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன் என்ற விகிதத்தில் விடப்படும். வளா்ந்த மீன் 100 முதல் 300 கொசு புழுக்களை உண்ணும். இத்தகைய மீன் விடப்படும் கிணறு மற்றும் நீா்நிலைகளில் பிளீச்சிங் பவுடா் மற்றும் ஆயில் போன்றவற்றை தெளிக்கக்கூடாது. இதன் வாழ்நாள் ஒரு ஆண்டு. இதற்காக 10 ஆயிரம் மீன்கள், மாநகா் முழுவதும் உள்ள நீா்நிலைகளில் விடப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 1200 கொசு ஒழிப்பு பணியாளா்கள், 60

சுகாதார ஆய்வாளா்கள், 5 மண்டல சுகாதார அலுவலா்கள் மற்றும் 21 துப்புரவு ஆய்வாளா்கள் அடங்கிய தனிக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments