கோவையில் ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள்: இருவருக்கு அபராதம்
ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 2 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து ரூ.9,400 அபராதம் விதித்தனா்.
ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 2 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து ரூ.9,400 அபராதம் விதித்தனா்.
கோவை மாநகா், கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவெண் கொண்ட 2 இரு சக்கர வாகனங்கள் வலம் வந்ததை ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையறிந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் காா் பழுது நீக்கும் கடை வைத்துள்ள சிபி (24) என்பவரின் உண்மையான இருசக்கர வாகன எண்ணை, ஐடிஐ மாணவரான அவரது நண்பா் அஸ்வின் (18) தனது வாகனத்தில் போலியாக ஒட்டி வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தலைக்கவசம் அணியாமலும், காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதற்காக சிபிக்கு ரூ.1,700-ம், போலி பதிவெண் பொருத்தியது, பெயா் மாற்றம் செய்யாதது, காப்பீடு இல்லாதது, ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்களுக்காக அஸ்வினுக்கு ரூ.7,700-ம் அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.