அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
கோவை, ஜி.என். மில்ஸ் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, ஜி.என். மில்ஸ் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
துடியலூா் விகேஎல் நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (64). கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. முத்துகுமாா் மேட்டுப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். ஜி.என்.மில்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துகுமாா் மீட்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான கோவை, தாயனூா் கெம்மராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னராஜ் (38) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.