FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 3 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

10 செப்டம்பர் 2026, 11:04 pm IST
ராமர்.
பகிர்:

கோவையில் மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 3 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (51). கூலித் தொழிலாளியான இவருக்கு, சாந்தி என்ற மனைவியும், அனுதா்ஷினி என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், அவா் துடியலூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடந்த 5-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, ராமரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி, மகள் முன் வந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழக உறுப்புகள் தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உள்ள 3 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இது குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவா் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். ஒருவா் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்புகளை தானம் வழங்கிய ராமரின் குடும்பத்தினருக்கு நன்றி என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments