FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மூளைச்சாவு அடைந்த ஓட்டுநா் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் காயமுற்று மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன.

2 செப்டம்பர் 2026, 11:29 pm IST
தானம் - பிரதிப் படம்
பகிர்:

சாலை விபத்தில் காயமுற்று மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தானமாக பெறப்பட்டன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (25). டிப்பா் லாரி ஓட்டுநா். இவா் கடந்த 30 ஆம் தேதி இரவு கீழக்கலங்கல் அருகே பைக்கில் சென்றபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மூளைச்சாவு அடைந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்த நிலையில், அவரது கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் உள்ளிட்டவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன. பின்னா் அரசு மரியாதையுடன் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments